எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை மாநகராட்சி மேயரின் உதவியாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு லிப்ஸ்டிக் அதிகமாக போடப்பட்டது தான் காரணமா? என கேள்விகள் எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சி மேயராக பிரியா தேர்ந்தெடுக்கப்பட்ட போது முதல் பெண் தபேதாரராக மாதவி என்பவர் நியமிக்கப்பட்டார். மேயருக்கு முன்னே செங்கோலை ஏந்தியும், கூட்ட நெரிசல் இல்லாமல் வழி ஏற்படுத்தி தருவதும் தபேதாரின் பணி. இந்நிலையில், தபேதர் மாதவி திடீரென மணலி மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மாதவிக்கு லிப்ஸ்டிக் பூசும் பழக்கம் இருந்ததால், அதனை பயன்படுத்தக் கூடாது என மேயர் பிரியாவின் நேர்முக உதவியாளர் சிவசங்கர் பலமுறை மெமோ வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனை, மாதவி கண்டுக்கொள்ளாமல் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு பணிக்கு வந்ததால், அவர் மணலி மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தபேதார் மாதவி பணியிட மாற்றத்திற்கு லிப்ஸ்டிக் போடப்பட்டது தான் காரணமா? என கேள்விகள் எழுந்துள்ளது.