உபரிநீர் கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணை கட்ட மக்கள் கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மழைக்காலம் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், கொள்ளிடம் ஆற்றில் உயர் மின்னழுத்த கோபுரம் சாய்ந்திருக்காது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை முதல் சாய்ந்த நிலையில் இருந்த உயர்அழுத்த மின் கோபுரம் நள்ளிரவில் தண்ணீரில் விழுந்தது. இந்நிலையில் இன்று காலை அங்கிருந்த மற்றொரு உயர் மின்னழுத்த கோபுரமும் தண்ணீரில் விழுந்தது. ஆனால் நல்வாய்ப்பாக நேற்றே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உபரி நீர் வருவதற்கு முன்பே அனைத்து துறைகளையும் முன்னெச்சரிக்கை செய்திருக்க வேண்டும் என குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், ஆற்றில் வெளியேறும் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்க வருங்காலங்களில் ஸ்ரீரங்கம் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றும் பொதுமக்கள் விடுத்துள்ளனர்.

varient
Night
Day