எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் மின் விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட தரைமட்ட மின் இணைப்பு பெட்டிகள், முறையான பராமரிப்புகள் இன்றி ஆபத்தான நிலையில் உயிரை காவு வாங்கும் நிலையில் இருப்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
விளம்பர திமுக அரசு பொதுமக்களின் நலனுக்காக அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம் என தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டு வந்தாலும், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை... அந்த வகையில் தான் சென்னை முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட மின் இணைப்பு பெட்டிகளின் நிலை உள்ளது.
சென்னை முழுவதும் மாநகர் பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்வதற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தரைமட்ட மின் இணைப்பு வெட்டிகள் அமைக்கப்பட்டு வீடுகள், கடைகள் என அனைத்து பகுதிகளுக்கும் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக தரைமட்ட மின் இணைப்பு பெட்டிகளை முறையாக பராமரிக்காத காரணத்தினால், மின் இணைப்பு பெட்டிகள் முழுவதும் சேதமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக சென்னையின் முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், எழும்பூர், புதுப்பேட்டை, சூளைமேடு, சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக்கூடிய தரைமட்ட மின் இணைப்பு பெட்டிகள் முறையான பாதுகாப்பு இல்லாமல் மரம், செடி, கொடிகள் வளர்ந்து அபாயகரமான நிலையில் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டுகள் ஏற்படுவதாகும், இதனால் கடும் சிரமங்களை சந்திப்பதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த மிக்ஜாம் புயலின் போது சேதமடைந்த மின் பெட்டிகளை சரி செய்ய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் புதுப்பேட்டை வரதராஜபுரம் பகுதியில் தினசரி மின்சார பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், உயிர்ச் சேதம் ஏதேனும் ஏற்பட்டால் மட்டும் தான் இந்த விளம்பர திமுக அரசு மின்சார பெட்டிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனா்.
தரைமட்ட மின் இணைப்பு பெட்டி முழுவதுமாக சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால், திடீரென மின் இணைப்பு பெட்டிகளில் இருந்து புகை வருவதால் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மின் கட்டணத்தை ஒருநாள் தாமதமாக செலுத்தினால் கூட மின்வாரியம் வட்டியுடன் கட்டணத்தை வசூலிக்கிறது அல்லது அடுத்த தினமே மின்சாரத்தை துண்டிக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாக மின் பெட்டிகள் சேதமடைந்து காணப்படுவதாகவும் இது குறித்து புகார் அளித்தால் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல், தங்களை அலைக்கழிக்கும் வேலைகளிலேயே இந்த விளம்பர திமுக அரசு ஈடுபடுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர் எழும்பூர் பகுதி மக்கள்.
தரைமட்ட மின் இணைப்பு பெட்டிகளும் ஆபத்தான நிலையில் உள்ளதை கண்டு கொள்ளாமல், அலட்சியமாக இருக்கும் விளம்பர திமுக அரசு, இனியாவது விழித்துக் கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் சென்னையில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின் இணைப்பு பெட்டிகளை முழுவதுமாக சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைs எடுக்க வேண்டும் என்பதே சென்னை மக்களின் கோரிக்கையாக உள்ளது.