உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 5 லட்சம் பறிமுதல் - மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.60 லட்சம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 5 லட்ச ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் பலத்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி மாவட்டம் முழுவதும் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 60 லட்சத்திற்கும் மேலாக பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் குற்றாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி 3 நபர்கள் கொண்டு வந்த 5 லட்ச ரூபாயை ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். 

Night
Day