உலகத் தமிழர்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழர் திருநாளாம் தைத்திருநாளையொட்டி, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தமிழக மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை போஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் பொங்கல் திருநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டார்.

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் “பொங்கலோ பொங்கல்” என மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் இத்தைத் திருநாளில், தனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளையும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

varient
Night
Day