உலக மார்பக புற்றுநோய் மாதம் - சென்னையில் களைகட்டிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

உலக மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு சென்னையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி களைகட்டியது.

வி.எஸ் மருத்துவமனை சார்பில் கோயம்பேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனை நிறுவனரும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவருமான சுப்ரமணியன் தலைமை தாங்கினார். இதில் பெண்கள் பாடல் பாடியும், நடனம் ஆடியும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக பெண்கள் வண்ணமயமான உடை அணிந்து நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மார்பக புற்றுநோய் குறித்தும், அதனை எவ்வாறு எதிர்கொள்வது  என்ற விழிப்புணர்வு சாமானிய மக்‍களிடம் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Night
Day