எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஊத்தங்கரை ஏரிக்கரையை தொடர்ந்து அங்குள்ள அண்ணாநகர் பகுதியில் சேறும் சகதியுமாக இருந்த தெருவில் புரட்சித்தாய் சின்னம்மா நடந்தே சென்று, மக்களை சந்தித்து வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, மழை வெள்ள பாதிப்பு முகாம்களில் தங்களுக்கு தரமற்ற உணவு கொடுக்கப்பட்டதாகவும், இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வேதனை தெரிவித்தனர்.
கனமழையால் வீடுகளை இழந்து தவிப்பதாகவும், ஆட்சியாளர்கள் இதுவரை தங்களை சந்திக்கவில்லை என்றும், அரசு சார்பில் எந்த நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் புரட்சித்தாய் சின்னம்மாவின் கரங்களைப் பற்றி பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர். குழந்தைகளை வைத்துக் கொண்டு தாங்கள் மிகவும் அவதிப்படுவதாக புரட்சித்தாய் சின்னம்மாவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டனர்.
மக்களின் குறைகளை தாயுள்ளத்துடன் கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா, பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.