எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணி ரூ.4,442 கோடி டெண்டரில் முறைகேடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிக்களுக்காக 4 ஆயிரத்து 442 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் கோரப்பட்ட டெண்டரானது பிஜிஆர் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டு, 2021-ல் மீண்டும் அதே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடவும் கோரி திருச்சி, திருமயம் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு,  தமிழக அரசுக்கும், டான்ஜெட்கோ-வுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Night
Day