எதிர்க்கட்சி போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது ஏன் - தமிழிசை சௌந்திரராஜன் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜகவிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் போராட அனுமதிக்காத காவல்துறையினர், திமுகவினரின் போராட்டத்திற்கு மட்டும் ஒரே நாளில் அனுமதி அளிப்பது ஏன் என தமிழக பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பெண் தலைவர்கள் வீதியில் இறங்கி போராடுவதற்கு எப்போதும் திமுக அனுமதி அளித்ததில்லை என குற்றஞ்சாட்டினார். ஆண்ட பரம்பரை என்று திமுக அமைச்சர் ஒருவரே ஜாதி பாகுபாடுகளோடு பேசுவதை கண்டிக்காத முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவது நியாயமற்ற செயல் என்றும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்காத காவல்துறையினர் திமுகவின் போராட்டத்திற்கு மட்டும் ஒரே நாளில் எவ்வாறு அனுமதி அளிக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.  

Night
Day