என் உயிரை காப்பாற்றிய சின்னம்மாவுக்கு நன்றி-கள்ளக்குறிச்சி முதியவர் கண்ணீர் மல்க பேட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கள்ளக்குறிச்சி சென்றிருந்தபோது, சாலையில் மயங்கி விழுந்து கிடந்த ஒருவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். அவர் சிகிச்சை முடிந்து, பூரண நலம்பெற்று வீடு திரும்பிய நிலையில், உரிய நேரத்தில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, தனது உயிரைக் காப்பாற்றிய புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்துள்ளார்.
Roll Visual

கள்ளக்குறிச்சியில் அண்மையில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில், தகவல் அறிந்ததும் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். 

மருத்துவமனையில் இருந்து புரட்சித்தாய் சின்னம்மா திரும்பிச் சென்ற போது, சாலையில் ஒருவர் மயங்கி விழுந்து கிடந்ததைக் கண்டார். கள்ளச்சாராயம் அருந்திய அந்த நபர், உடல்நலம் பாதிக்கப்பட்டு கீழே விழுந்தது தெரியவந்தது.  அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல புரட்சித்தாய் சின்னம்மா முயற்சி மேற்கொண்ட போது,  மருத்துவமனை தரப்பில் ஆம்புலன்ஸ் அனுப்ப மறுத்ததால் , உடனடியாக ஆட்டோ ஒன்றை பிடித்து, அவரை மருத்துவமனைக்‍கு அனுப்புமாறு புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தினார். புரட்சித்தாய் சின்னம்மா ஆணைக்கிணங்க கழகத் தொண்டர்கள் உடனடியாக ஆட்டோ பிடித்து, மயங்கி கிடந்தவரை அதில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பதும், அவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக பணியாற்றி வருவதும் பின்னர்  தெரியவந்தது.

 கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக தீவிர சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்த கணேசன் வீடு திரும்பினார்.  புரட்சித்தாய் சின்னம்மா தன்னை மீட்டு, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பியதால் தான்,  தான் உயிர் பிழைத்ததாகவும் இதற்காக சின்னம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பதாகவும், உடல் நலம் பெற்ற கணேசன் கண்ணீர் மல்க  தெரிவித்தார்.

புரட்சித்தாய் சின்னம்மா உரிய நேரத்தில் வந்து உதவி செய்ததால் தான் தனது கணவர் கணேசன் உயிர்பிழைத்ததாக அவரது மனைவி அஞ்சலை கண்ணீர் மல்க கூறினார்.


Night
Day