என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட தடை - உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

என்.எல்.சி. நிர்வாகத்துக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்சனையில் பேச்சுவார்த்தை குழுவை அணுக அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம், அதுவரை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் விடுத்த வேலைநிறுத்த போராட்ட அழைப்பை எதிர்த்து என்.எல்.சி நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பிரச்னைக்கு தீர்வு காண 6 மாதங்களில் உயர்மட்டக்குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரச்சனை தொடர்பாக இருதரப்பும் பேச்சுவார்த்தை குழுவை அணுகவும், அதுவரை போரட்டத்தில் ஈடுபட தொழிலாளர்களுக்கு தடையும் விதித்த நீதிபதிகள், விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

varient
Night
Day