எம்.எல்.ஏ குடும்பத்தினர் ஜாமீன் மனுக்கள் மீது பதிலளிக்க சிறுமிக்கும், காவல்துறைக்கும் நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ.-வின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் ஜாமின் கோரிய மனுவுக்கு, பதிலளிக்கும்படி காவல்துறைக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, திமுக எம்.எல்.ஏ-வின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி D. V. ஆனந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரின் ஜாமின் மனுவிற்கு காவல்துறையும், பாதிக்கப்பட்ட பெண்ணும் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Night
Day