எலி ஸ்பிரேவை வாயில் வைத்துக் கொண்டு விளையாடிய 4 சிறுவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே எலி ஸ்பிரேவை வாயில் வைத்துக் கொண்டு விளையாடிய 4 சிறுவர்கள், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மண்ணவேளாம்பட்டியை சேர்ந்த ராமராசு என்பவரின் மகன் ரிசிகேஸ் , பழனிச்சாமி என்பவரின் மகன் ரித்திக், வீரப்பன் என்பவரின் மகன் கருப்பசாமி மற்றும் பரமசிவம் என்பவரின் மகன் தனபிரியன் ஆகியோர் விளையாடியுள்ளனர். ஏறக்குறைய 6 வயதான சிறுவர்களும் விளையாடியபோது, அங்கு கிடந்த எலி ஸ்பிரேவை எடுத்து வாயில் வைத்து விளையாடியதாக கூறப்படுகிறது. இதனால் எலி ஸ்பிரேயின் நுரை சிறுவர்களின் வாயில் சென்றதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக 4 சிறுவர்களையும் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருந்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் சிறுவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்துள்ளதாகவும், பிரச்சனை எதுவும் இல்லையென்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Night
Day