எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான 22 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்ற காவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை எல்லையில் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரையும் வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக 22 தமிழக மீனவர்களை நேற்று இரவு அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்சேன்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், விசாரணைக்கு பின் அவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் 22 பேரையும் வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

varient
Night
Day