எல் நினோ காலநிலையால் மார்ச் முதல் மே வரை வழக்கத்தைவிட வெப்பநிலை அதிகரிக்கும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல் நினோ காலநிலை நிகழ்வால் மார்ச் முதல் மே வரை சாதாரண அளவைவிட வெப்ப நிலை அதிகரித்து காணப்படுமென ஐநாவின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. எல் நினோ என்பது உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வாகும். இந்நிகழ்வு, 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என்று கூறப்படுகிறது. எல் நினோ தற்போது படிப்படியாக வலுவிழந்து வரும் நிலையில், மார்ச் முதல் மே மாதம் வரை வழக்கத்தை விட வெப்ப நிலை அதிகமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day