எஸ்டிபிஐ நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜிக் என்பவரது வீட்டில் 5க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வரும் ரீலா என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day