ஏசி கோச்சில் எலிகள் குளுகுளு பயணம்... அச்சத்தில் ரயில் பயணிகள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

தென் மாவட்ட வணிகர்கள், பொதுமக்கள் என பலா் பயணித்து வரும் பழமையான வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி கோச்சில், பெருச்சாளிகள் தொல்லை அதிகரித்துள்ளது... ஏசி கோச்சில் எலிகள் குளுகுளுவென காத்து வாங்கி கொண்டு பயணிகளுக்கு தொல்லை செய்துவரும் சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

கடந்த 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது மதுரை - சென்னை வைகை பகல் நேர விரைவு ரயில். தென் மாவட்ட வணிகர்கள், பொதுமக்களுக்கு இந்த ரயில் பெரிதும் பயனுள்ளதாக தற்போதும் உள்ளது. இந்த ரயில் அறிமுகமான ஆண்டிலேயே மீட்டர் கேஜ் ரயில் பாதையில் மணிக்கு 105 கிலோ மீட்டா் வேகத்தில் சென்ற இந்தியாவின் அதிவிரைவு ரயில் என்ற பெருமையைப் பெற்றது. ஆசியாவிலேயே மீட்டர் கேஜ் பாதையில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் எனும் புகழும் இதற்கு உண்டு. வைகை எக்ஸ்பிரஸ், பகல் நேரத்தில் சென்னைக்குப் பயணிக்கும் வசதிக்கென ஓட தொடங்கியது. 

இந்த ரயிலில் சென்னை - மதுரை, மதுரை- சென்னை மார்க்கமாக தினமும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். அப்படியான இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டிகளில் பரமரிப்பு இல்லாமல் அதிகளவிற்கு எலிகள் ஆங்காங்கே சுற்றிதிரியும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.. இதனால் பயணிகள் கடும் அச்சத்தோடு பயணிக்கும் நிலை உருவாகியுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டியின் சி3 ஏசி பெட்டியில், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பெருச்சாளிகள் ஆங்காங்கே சுற்றிதிரிந்ததை பயணிகள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். 

இந்த பெருச்சாளிகள் பயணிகளின் உடமைகளையும், உணவுப்பொருட்களையும் கடித்து சேதப்படுத்துவது ரயில் பயணிகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் எலித்தொல்லைகள் அதிகளவில் இருப்பதால் பயணிகள், நாள்தோறும் அச்சத்தோடு பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து எலித்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day