ஏப்.14 அம்பேத்கர் பிறந்தநாள் - புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

கழக பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 14ம் தேதி திங்கள் கிழமை காலை 11 மணிக்கு,  கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு அருகே அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பெருமைக்குரிய நிகழ்ச்சியில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழிவந்த கழகத் தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், பொது மக்களும் ஜாதி, மத பேதமின்றி, அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளது. 

varient
Night
Day