ஏற்காடு பேருந்து நிலையத்தில் கழிவு நீர் வழிந்தோடுவதால் முகம் சுளிக்கும் சுற்றுலா பயணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஏற்காடு பேருந்து நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீர் வழிந்தோடி சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் முகம் சுளிக்க வைத்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்காடு ஊராட்சி சார்பில் கழிவுநீர் ஓடும் சாலையில் நான்கு அடி குழி தோண்டி அதில் கழிவு நீரை தேக்கி வைக்கப்பட்டது. பின்பு ஒருமாதமாகியும் சாக்கடை பணிகள் மேற்கொள்ளாததால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாது தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்கள் ஏற்காடு ஊராட்சியில் முறையிட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Night
Day