ஏற்காட்டில் மலர் கண்காட்சி துவங்கியது

எழுத்தின் அளவு: அ+ அ-

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் 47வது கோடை விழா மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. இதனையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டுகளித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு அண்ணா பூங்காவில் 47வது கோடை விழா மலர் கண்காட்சி பொய் கால் குதிரை நடனங்களுடன் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தோட்டக்கலைத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் வண்ண, வண்ண மலர்களால் பல்வேறு வடிவங்கள் வடிவமைத்து, அழகுப்படுத்தப்பட்டு உள்ளது.

கடல் வாழ் உயிரினங்களான மீன், ஆக்டோபஸ், கடல் குதிரை, முத்துசிப்பி, காற்றாலை போன்றவை பல்வேறு மலர்களை கொண்டு வடிவமைத்துள்ளது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் 50 ஆயிரம் தொட்டிகளில் வண்ணமயமான மலர்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 5 நாட்கள் நடைபெறும் கோடை விழா மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Night
Day