ஐஐடி மாணவர்களின் சிறந்த கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஐஐடி மாணவர்களின் சிறந்த கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் விதமாக "இன்வென்டிவ் - 2025" நிகழ்ச்சியில் மாணவர்களின் சிறந்த படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


 2 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. "இன்வென்டிவ் 2025" நிகழ்ச்சியில் காட்சிப்படுத்துவதற்காக 185 கண்டுபிடிப்புகளுக்கு மேல் தேர்வு செய்யப்பட்டு 215 அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், சுகாதாரத்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த புதிய திட்டங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. பல்வேறு  உயர் கல்வி நிறுவனங்களோடு கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் ஐஐடி, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day