ஐகோர்ட் உத்தரவு - கொடிக்கம்பங்களில் நோட்டீஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, மதுரையில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற கூறி, கொடி கம்பங்களில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள  அரசியல் கட்சிகள் மற்றும் சாதிய அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டு இருந்தது. இதை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வும் உறுதி செய்தது.

இந்நிலையில், மதுரை மாநகரில் அவனியாபுரம், கோ புதூர், அண்ணாநகர், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்றக் கோரி, மதுரை நெடுஞ்சாலை உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகம் சார்பில் கட்சி கொடி கம்பங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றுமாறு நோட்டீசுகளை ஒட்டினர்.

Night
Day