ஒகேனக்கல் கூட்டுக்‍ குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு : வீணாக வெளியேறிய தண்ணீரை கிணற்றில் சேமித்த கிராம மக்‍கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒகேனக்கல் கூட்டுக்‍ குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறிய தண்ணீரை கிராம மக்‍கள் கிணற்றில் சேமித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தட்டகல் கிராமத்தில் வசிக்‍கும் மக்‍களுக்‍கு ஒகேனக்கல் கூட்டுக்‍ குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்‍கும் பணியின்போது, ஒகேனக்கல் கூட்டுக்‍ குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. கிராமத்தில் போதிய குடிநீர் வசதி இல்லாததால், உடைபட்ட குழாயிலிருந்து வெளியேறிய நீரை குடங்களில் கிராம மக்கள் பிடித்துச் சென்றனர். பின்னர் வீணாக வெளியேறிய நீரை கால்வாயில் விட மனமில்லாமல், அருகே இருந்த கிணற்றில் சேமித்தனர். ஊழியர்கள் வந்து உடைப்பை சரிசெய்வதற்குள் பாதி கிணறு நிரம்பியதாக கிராம மக்‍கள் தெரிவித்தனர். 

Night
Day