ஒசூரில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விடுமுறையையொட்டி படையெடுத்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்விடுமுறையையொட்டி பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. மேலும் ஓசூர் அடுத்த கோபச்சத்திரம் பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வருவதால் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுந்து நின்றன. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Night
Day