ஒரு வாரம் கடந்தும் வடியாத வெள்ளம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் நகருக்குட்பட்ட கீழ்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீரால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

 ஃபெஞ்சல் புயல் கடந்த 30ஆம் தேதி கரையை கடந்தபோது ஆயிரக்கணக்கான வீடுகள், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் சேதமடைந்தது. இதனிடையே கீழ்பெரும்பாக்கம், பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

Night
Day