ஒரே நேரத்தில் 1.80 லட்சம் கனஅடி நீரை திறந்து விட்டதே வெள்ளத்திற்கு காரணம் - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜீவா நகரில் நிவாரண உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்னம்மா, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அளவுக்‍கு அதிகமாக மழை பெய்தும், 977 ஏரிகள் நிரம்பவில்லை என்றும் இதற்கு நீர் மேலாண்மையை விளம்பர திமுக அரசு சரிவர கையாளமல் விட்டதே காரணம் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார். மக்‍கள் தூங்கிக்‍ கொண்டிருக்‍கும்போது, சாத்தனூர் அணையிலிருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதே வெள்ள பாதிப்புக்‍கு காரணம் என்று குற்றம்சாட்டிய புரட்சித்தாய் சின்னம்மா, மக்‍களைப் பற்றி சிந்தித்த ஒரே அரசாங்கம் புரட்சித்தலைவி அம்மாவின் அரசாங்கம் என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், 2026ல் மக்‍களுக்‍கு நல்லகாலம் பிறக்‍கும் என்றும்  புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபட கூறினார். 

Night
Day