ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் கடந்த 15ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், சென்னை உட்பட பல இடங்களில் கனமழை பெய்தது. தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக ஆந்திர மாநிலம் நெல்லூர் இடையே கரையை கடந்தது.

இந்நிலையில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், வங்கக்கடலில் வரும் 22ம் தேதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வரும் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் 20ம் தேதி வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு புதிய காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Night
Day