ஓசூர் அருகே மீண்டும் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய 5 காட்டு யானைகள்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மீண்டும் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய 5 காட்டு யானைகளால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

ஆழியாளம் பகுதியில் முகாமிட்டிருந்த 5 காட்டு யானைகளை வனத்துறையினர் சாண மாவு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த யானைகள் கெம்பீரனபள்ளி கிராமத்தில் உள்ள விளைநிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்ததுடன் அந்தப் பகுதியில் உள்ள அடர்ந்த புதரில் தஞ்சமடைந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதுடன் மீண்டும் அடர்ந்த வனப் பகுதிக்குள்ளே விரட்டுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதி கிராம மக்கள் யானை முகாமிட்டுள்ள பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Night
Day