ஓசூர் தீ விபத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே வன்னிபுரத்தில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நிறுவனத்தில் கெமிக்கல் தயாரிக்கப்படும் 4வது அலகில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில், வானுயர எழும்பிய கரும்புகையால், இரவு பணிக்கு சென்ற சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை நெருங்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தின் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கரும்புகை வானத்தை நோக்கி எழும்பியதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Night
Day