கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசியில், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கவில்குமார், பொன்பாண்டி ஆகிய இருவரை கைது செய்தனர். இதையடுத்து, இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக்கோரி போலீசார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனர். அதனடிப்படையில், தற்போது இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Night
Day