கடலூர்: சத்திய ஞானசபை பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். வடலூர் வள்ளலார் தெய்வநிலையம், சத்திய ஞானசபை பகுதி பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வள்ளலார் பக்தர்கள் மற்றும் பார்வதிபுரம் கிராமமக்கள் ஆர்ப்பாட்ட்டத்தில் ஈடுபட முயன்றனார். ஆனால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் முன்பே அங்கிருந்த 27பேரை கைதுசெய்த போலீசார், அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அதனை தொடர்ந்து தெய்வ தமிழ் பேரவை சார்பில் வடலூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் செய்து, சாலைமறியலில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

Night
Day