கடலோர பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் விவேகானந்தர் பாறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி, நாளை மறுநாள் கன்னியாகுமரி வருவதையொட்டி விவேகானந்தர் நினைவு மண்டபம் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடிக்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து வரும் 30ம் தேதி பிற்பகல் திருவனந்தரபுரம் வருகை தர உள்ளார். பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்லும் அவர், படகு மூலம் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்கிறார். அன்றைய தினம் மற்றும் 31ம் தேதி முழுவதும் தியானத்தில் ஈடுபட உள்ள பிரதமர் மோடி, ஜூன் 1ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு படை போலீசார், கன்னியாகுமரி போலீசார் என 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே போன்று கடலோர பாதுகாப்பு படை போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Night
Day