கடல் சீற்றம் காரணமாக திருச்செந்தூர் கடற்கரையில் குளிக்க தடை

எழுத்தின் அளவு: அ+ அ-

கடல் சீற்றம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில் கடல்சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கடல்அலை  வழக்கத்தை விட அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே பக்தர்கள் கடலில் குளிப்பதற்கு தடை விதித்து, பொதுமக்கள் கடலில் இறங்க வேண்டாமென ஒலிபெருக்கி மூலம் காவலர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனிடையே, கோடை விடுமுறையை முன்னிட்டு கோவிலுக்கு தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர்கள் கடலில் புனித நீராட முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

Night
Day