கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்து..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் அதிகாலையில் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 


வைரவன் குப்பத்தைச் சேர்ந்த இளங்கோவிற்கு சொந்தமான படகில் இளங்கோ, சுந்தர், ஜானகி ராமன் ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர். அப்போது கடல் சீற்றம் காரணமாக படகு இரண்டாக உடைந்து 80 கிலோ மீன் பிடி வலை கடலில் இழுத்துச் சென்ற நிலையில் இளங்கோ, சுந்தர், ஜானகி ராமன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Night
Day