கடும் எதிர்ப்பையும் மீறி மாநில நெடுஞ்சாலைகள் ஆணைய மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் போல் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தை நிறுவும் மசோதாவை சட்டப்பேரவையில் விளம்பர திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. தனியார் மற்றும் அரசு இணைந்து மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தை நிறுவும் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றபட்டது. இந்த சட்ட மசோதாவை திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ வேல்முருகன் கடுமையாக எதிர்ப்பதாக கூறினார். உறுப்பினர்கள் கேள்விக்‍கு பதில் அளித்த நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஏவ வேலு, மாநில நெடுஞ்சாலைகளை பராமரிக்க தமிழ்நாடு அரசிடம் போதிய நிதி இல்லாததால், தனியார் பங்களிப்புடன் மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தை அமைப்பதாக தெரிவித்தார்.

varient
Night
Day