கடும் பனிமூட்டம் - சென்னை புறநகர் மின்சார ரயில்கள் தாமதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

பனிமூட்டம் காரணமாக வடசென்னை, எண்ணூர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. மேலும் அதிக பனிமூட்டம் காரணமாக தண்டவாளங்கள் இருளடைந்து காணப்பட்டதால், மின்சார ரயில்கள் அதிக ஒலி எழுப்பியபடியும், முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறும் சென்றது.

Night
Day