கடைகளை அடைத்து போலீசாரை குவித்திருப்பது அவசர கால நிலையை நினைவுபடுத்துகிறது - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் மக்களைச் சந்திக்க வரும் போது, தெரு விளக்குகளை அணைத்து ஏராளமான காவலர்களை குவித்திருப்பது, நெருக்கடி கால நிலையை காட்டுவதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சாடியுள்ளார். 

வடசென்னையில் உள்ள வள்ளலார் நகரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், தான் வரும் வழியெங்கும் கடைகளை அடைத்து, தெருவிளக்குகளை அணைத்து வைத்து, ஏராளமான போலீசாரை குவித்துள்ளதாக குற்றம் சாட்டினார். இவை யாவும் நெருக்கடி கால நிலையை தனக்கு நினைவுபடுத்துவதாகவும் இதுதான் தமிழகத்தின் கலாச்சாரமா எனக் கேள்வி எழுப்பினார். திமுக என்றால் குடும்ப ஆட்சி, பணத்தை கொள்ளையடிப்பது, கட்டப் பஞ்சாயத்து என்று அர்த்தம் எனக் குறிப்பிட்ட நட்டா, இண்டி கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் குடும்ப ஆட்சி நடத்துவோர் என விமர்சித்தார். மிக உயரிய மொழி, கலாச்சார பண்பாட்டைக் கொண்ட தமிழகத்தை மோசமான திமுக ஆள்வதாகவும் அக்கட்சியை தமிழக மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள் எனத் தெரிவித்தார்.

Night
Day