கனமழையால் 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையுடன் கூடிய பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தூத்துக்குடியில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாமென மீனவத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனால் 2வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகளும், 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

Night
Day