எழுத்தின் அளவு: அ+ அ- அ
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் காரைக்காலின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் காரைக்காலின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.