கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் வரும் 7ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளதாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 18 சென்டி மீட்டரும், நாலுமுக்குவில் 16 சென்டி மீட்டரும், காக்காச்சி பகுதியில் 15 சென்டி மீட்டரும், மாஞ்சோலையில் 13 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.  

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், வரும் 7ம் தேதி வரை தமிழக கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும் என்றும், அதிகாலையில் லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

varient
Night
Day