கன்னியாகுமரி கடல் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் மன்னார் வளைகுடா, குமரி கடல் மத்திய மேற்கு தென்மேற்கு வங்க கடல் தெற்கு ஆந்திரா கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 2 புள்ளி 6 மீட்டர் உயரத்திற்கு பேரலைகள் எழும்ப வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய கடல் தகவல் சேவை மையம் விடுவித்துள்ளது. எனவே மீனவர்கள் தங்களுடைய படகுகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Night
Day