கன்னியாகுமரி: சாலையில் குவிந்துள்ள கனரக வாகனங்களால் விபத்து நேரிடும் ஆபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக-கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்‍காவிளை அருகே கனிம வள கடத்தலுக்‍கு பயன்படுத்திய வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்‍கப்பட்டுள்ளதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு அனுமதியின்றி அதிக அளவில் கனிம வளங்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள், அவ்வப்போது சோதனை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த வாகனங்களை, போலீசார் களியக்‍காவிளை காவல்நிலையத்தின் முன் தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தியுள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதுடன் விபத்துகள் நேரிடும் அபாயம் இருப்பதாக பொதுமக்‍கள் புகார் தெரிவிக்‍கின்றனர். இந்த வாகனங்களை அகற்றவும் அவர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர். 

Night
Day