கன்னியாகுமரி: தனியார் சுய உதவி குழு பெண்கள் எஸ்.பி அலுவலகத்தில் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரியில் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் உதவி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தனியார் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். திருவரம்பு பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர் தலைமையில் செயல்படும் தனியார் சுய உதவி குழுவானது, அரசு வங்கிகளில் கடற்கரை கிராமங்களில் மக்களுக்கு கடன் வாங்கிக் கொடுப்பது, அந்த கடன் தொகையை மாத மாதம் வட்டியுடன் பிரித்து வங்கியில் செலுத்துவது ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. அரசு வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் உதவி கிடைப்பதால், தொழில் பாதிக்கப்படுவதை கண்ட கந்து வட்டி கும்பல், தவணைத் தொகையை வங்கியில் திருப்பிச் செலுத்தாதீர்கள் என கடன் வாங்கியவர்களிடம் மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகாரளித்தும் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயந்தி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக தனியர் சுய உதவிக்குழு பெண்கள் குற்றம்சாட்டினர்.

Night
Day