தமிழகம்
நெல்லையில் விளம்பர திமுக அரசைக் கண்டித்து பேராசிரியர்கள் நூதன போராட்டம்...
விளம்பர அரசைக் கண்டித்து நெல்லையில் கல்லூரி பேராசிரியர்கள் நூதன முறையில?...
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிபாலத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் ஸ்ரீநிவாசபுரத்தை சேர்ந்த பிரதீஸ்வரன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் நேற்று மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு சுற்றுலா வந்துள்ளார். பாலத்தை சுற்றி பார்த்தவர்கள் தடை செய்யப்பட்ட தொட்டிபாலத்தின் பகுதியில் குடும்பத்தினருடன் குளித்துள்ளனர். அப்போது பிரதீஸ்வரன் தண்ணீரில் மூழ்கியதை தொடர்ந்து குடும்பத்தினர் அவரை மீட்டு குலசேகரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளம்பர அரசைக் கண்டித்து நெல்லையில் கல்லூரி பேராசிரியர்கள் நூதன முறையில?...
இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ X தள பக்கம் முடக்கப்பட்டுள்ள...