கன்னியாகுமரி: பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் குடியிருப்பு  பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில், பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதால் மக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும் போது அதிலிருந்து வெளியாகும்  நச்சுபுகையால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மூச்சுதிணறல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் சிரமப்படும் சூழல் நிலவுகிறது. மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

varient
Night
Day