கருணாநிதி நினைவிடத்தில் கோயில் கோபுர அலங்கரிப்பு - அண்ணாமலை கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறி அமைச்சர் சேகர்பாபு செயல்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.


இது குறித்து அவர் எக்‍ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

varient
Night
Day