எழுத்தின் அளவு: அ+ அ- அ
திமுக தலைமையிலான அரசு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக, விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்வதில் பல்வேறு முறைகேடுகளும், தில்லுமுல்லுகளும் நடைபெறுவதாக செய்திகள் வருவது மிகவும் கண்டனத்திற்குரியது என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். தமிழக விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கரும்பு விவசாயிகளிடமிருந்து கரும்புக்கான உரிய விலையை கொடுத்து, விளைவித்த கரும்புகள் அனைத்தையும் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் திமுக தலைமையிலான விளம்பர அரசை, புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையிலான அரசு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக, விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்வதில் பல்வேறு முறைகேடுகளும், தில்லுமுல்லுகளும் நடைபெறுவதாக செய்திகள் வருவது மிகவும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார். தமிழக விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கரும்பு விவசாயிகளிடமிருந்து கரும்புக்கான உரிய விலையை கொடுத்து, விளைவித்த கரும்புகள் அனைத்தையும் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில்தான், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் சேர்த்து கொடுக்கப்பட்டது - இதன் காரணமாக தமிழக கரும்பு விவசாயிகள் பெரும் அளவில் பயனடைந்தனர் - ஆனால், திமுக தலைமையிலான அரசு, விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்வதில், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவது மிகவும் கண்டனத்திற்குரியது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பாபநாசம், அனவன்குடியிருப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள், விழுப்புரம் மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார பகுதிகள், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த சமய சங்கிலி, களியனூர், அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகள், திருவாரூர் மாவட்டம் மற்றும் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர், கருப்பட்டி சேரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகள் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பன்னீர் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது -
விவசாயிகளின் கடின உழைப்பால், செழிப்பாக வளர்ந்து ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பன்னீர் கரும்புகள் அனைத்தும் கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் மிகவும் சேதமடைந்தன - கடன் வாங்கி ஒரு ஏக்கருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்து பாதுகாத்து வந்த பன்னீர் கரும்புகள் அனைத்தும் புயலால் சாய்ந்ததைக் கண்டு கண்ணீர் வடித்த விவசாயிகள், மனம் தளராமல், சாய்ந்து கீழே விழுந்த கரும்புகளை, தூக்கி நிறுத்தி வைத்து, தற்போது மீண்டும் உயிர் கொடுத்து பாதுகாத்து உள்ளனர் - இதற்காகவே ஒரு ஏக்கருக்கு கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர் - இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதலை சரியாக செய்யாமல், பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி அவர்கள் வயிற்றில் அடிப்பது எந்தவிதத்தில் நியாயம்? என புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைமையிலான அரசு கரும்பு கொள்முதல் செய்வதில் மிகவும் பாரபட்சம் காட்டுவதாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் - அதாவது ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து கரும்பு கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர் - மேலும், புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலங்களில் ஒவ்வொரு விவசாயியிடம் இருந்தும் 100 முதல் 150 வரையிலான கட்டுக் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒவ்வொரு விவசாயியிடம் இருந்தும் வெறும் 50 முதல் 80 வரையிலான கட்டு கரும்புகளை மட்டுமே கூட்டுறவு துறை அதிகாரிகள் கொள்முதல் செய்வதாக கரும்பு விவசாயிகள் சொல்லி வேதனைப்படுகின்றனர் - மேலும் போக்குவரத்து செலவினம் மற்றும் வெட்டுக்கூலி உட்பட ஒரு கரும்புக்கு 35 ரூபாய் என விலை நிர்ணயம் செய்த நிலையில் தற்போது கரும்புக்கு 20 முதல் 22 ரூபாய் மட்டுமே கொடுப்பதாகவும், அதிலும் வெட்டுக்கூலி, ஏத்துக்கூலி போக கையில் வெறும் 10 ரூபாய்தான் கிடைப்பதாக சொல்லி விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனர் - மேலும், ஒரு கரும்புக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைத்தால்தான் தங்களால் சமாளிக்கமுடியும் என தமிழக கரும்பு விவசாயிகள் தெரிவிக்கின்றனர் - இடுபொருள் விலை உயர்வு, விவசாய கூலி உயர்வு , கனமழை, ஃபெஞ்சல் புயல், கடுமையான வெள்ளம் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில்தான் கரும்பு விவசாயிகள் செங்கரும்பை விளைவித்து இருக்கின்றனர் - எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்புக்கு உரிய விலை கிடைத்தால்தான் நஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியும் என்பதை திமுக தலைமையிலான அரசுக்கு தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூட்டுறவு துறையினர் சுமார் 6 அடிக்கு மேல் இருக்கும் கரும்புகளை மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதாகவும், 500 கட்டுகள் கொள்முதல் செய்யவேண்டிய இடத்தில் 250 கட்டுகள் மட்டுமே அவர்கள் கொள்முதல் செய்வதாகவும், இதனால் மீதமுள்ள கரும்புகளை அடிமட்ட விலைக்கு விற்பனை செய்யவேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் மிகவும் வேதனைப்படுகின்றனர் - அதாவது, தமிழக அரசே தரமான, அதிக உயரம் வளரக்கூடிய கரும்பு விதைகளை விவசாயிகளுக்கு அளித்து பயிரிட செய்து இருந்தால், இன்றைக்கு அதிக உயரம் கொண்ட கரும்புகளை விளைவித்து இருக்கமுடியும் - இதனைக்கூட செய்ய முடியாத திமுக தலைமையிலான அரசு, விவசாயிகளிடம் கிடைக்கின்ற கரும்பை கொள்முதல் செய்யாமல் ஒதுக்குவது எந்தவிதத்தில் நியாயம்? என புரட்சித்தாய் சின்னம்மா வினவியுள்ளார்.
தமிழக விவசாயிகள் ஏற்கனவே ஃபெஞ்சல் புயல், மழை, வெள்ளம் போன்ற பல்வேறு இடர்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள் - எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய, கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு சேரவேண்டிய கரும்புக்கான கொள்முதல் விலை முழுவதுமாக கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - மேலும் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து உரிய விலை வைத்து அனைத்து கரும்புகளையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதேபோன்று இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்வதை விட்டுவிட்டு, விவசாயிகளிடமிருந்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் எந்தவித முறைகேடுகளும் நடைபெறாத வகையில், நியாயமான முறையில் கரும்பு கொள்முதலை செய்ய வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசை புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.