கருவின் பாலினம் அறியும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை : மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து அறியும் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 


யூடியூபர் இர்பான், துபாய் சென்ற போது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை பரிசோதனை செய்து, அதனை வெளிப்படையாக தெரிவித்து கொண்டாடிய விவகாரம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. கருவின் பாலினத்தை அறிந்துகொள்வது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்கள், ஸ்கேன் சென்ட்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரித்துள்ளது.

Night
Day