கரூரில் மதுபான கடை சுவரை துளையிட்டு கொள்ளையடித்த மர்ம நபர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே டாஸ்மாக்கில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குளித்தலை அருகே உள்ள பிள்ளபாளையம் அரசு மதுபான கடையில் இரவில் பின்புறமாக சுவரை துளையிட்டு சுமார் 150 க்கு மேற்பட்ட உயர் ரக மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். 28 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களுடன், அங்கு வைத்திருந்த 6 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிவிட்டு, அப்பகுதியில் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர். மேலும் மதுபான கடையில் இருந்த நான்கு சிசிடிவி கேமராக்களையும் எடுத்துச் சென்ற  மர்ம நபர்கள் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day