கரூர்: பறிமுதல் செய்யப்பட்ட பழைய இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம் குளித்தலை வருவாய் கோட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த பழைய இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், குளித்தலை வருவாய் கோட்டச்சியார் அலுவலகம் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் அலுவலகத்தில் குவிந்திருந்த குப்பைகளை தீயிட்டு எரித்த போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனங்கள் மீதும் தீ பற்றி கொண்டது. வேகமாக பரவிய தீயால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி தீயணைப்பு துறையினர் தீயை காட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Night
Day